விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 6 தமிழ் நிகழ்ச்சியின் இறுதிப்போட்டியில் அசீம் வெற்றி பெற்றுள்ளார். 21 போட்டியாளர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட போட்டியின் இறுதிப்போட்டியில் அசீம், விக்ரமன் மற்றும் ஷிவின் ஆகியோர் சென்றனர். தங்களின் தனித்துவமான குணங்கள் மூலம் ரசிகர்களின் மனதை வென்று பிக்பாஸ் தமிழின் இறுதிப் போட்டி வரை சென்ற அவர்களில் இப்போது அசீம் வெற்றி பெற்றுள்ளார். இதனையொட்டி மக்கள் நாயகன் அசீம் என்ற ஹேஸ்டேக் இணையத்தில் டிரெண்டாகியுள்ளது.
அசீம் கோபம் மற்றும் தடித்த வார்த்தைகள் மக்களிடையே மிகப்பெரிய கோபத்தை உருவாக்கினாலும், அவர் தனித்துவமாக விளையாடியதாக கூறி அவருக்கு ரசிகர்கள் தொடர்ச்சியாக வாக்களித்தனர். ஷிவின் மற்றும் விக்ரமன் ஆகியோர் தங்களின் அமைதி மற்றும் தெளிவான அணுகுமுறைகளால் மக்களை கவர்ந்தனர். இருந்தாலும் இறுதிப்போட்டியில் வெல்லப்போவது யார்? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்திருந்தது. விக்ரமனுக்காக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனே டிவிட்டர் பக்கத்தில் நேரடியாக ஆதரவு கேட்டார். பிக்பாஸ் என்பது ஒரு நிகழ்ச்சி என்றாலும் எளிய மக்களின் குரலையும், வாழ்வியலையும் கிடைக்கும் சந்தர்ப்பங்களில் எல்லாம் பேசிக் கொண்டே இருந்ததாக அவர் குறிப்பிட்டார்.
அவரைத் தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் உள்ளிட்ட சமூகம் மீது அக்கறை கொண்ட பலரும் விக்ரமனுக்காக பொதுவெளியில் ஆதரவு கேட்டனர். இருந்தபோதும், அதிக வாக்குகளை பெற்ற அசீம், பிக்பாஸ் சீசன் 6 தமிழின் டைட்டிலை வென்று அசத்தியுள்ளார்.
அவர் விக்ரமன் மற்றும் ஷிவின் ஆகியோரை விட அதிக வாக்குகளை பெற்றதாக கூறப்படுகிறது. பிக்பாஸ் இறுதிப்போட்டி நிகழ்ச்சி மேடையில் முதல் இரண்டு இடங்களில் இருந்த விக்ரமன் மற்றும் ஆசீம் ஆகியோரின் கைகளை பிடித்திருந்த கமல்ஹாசன், இறுதியாக அசீம் கையை உயர்த்தி வெற்றியாளராக அறிவித்தார். இதனை தொடர்ந்து பிக்பாஸ் தமிழின் வெற்றியாளருக்கான பரிசுத் தொகையை அசீம் பெற்றுக் கொண்டார்.
கடைசி வார்த்தையில் மானம் உண்டு, முதல் வார்த்தையின் மென்மைக்காக இறந்தன பூச்சிகள். காஞ்சியில் நான் யார்?
பேப்பர் கிடையாது வாய்பாடு தெரியாது . கணக்கிலோ புலி அது என்ன?
சொன்ன நேரத்துக்கு தொண்டை கிழிய கத்துவான். அவன் யார் ?
மாந்திரீக பூஜை என்றால் என்ன? பன்னீர்செல்வம் கேள்விக்கு பதில் சொன்ன திமுக அமைச்சர்!
எடப்பாடிக்கு எதிரான போர்க்கொடி, செங்கோட்டையனின் கட்சிப் பதவிகள் பறிப்பு?
சபாநாயகர் அப்பாவு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி!
செங்கோட்டையனை சமாதானப்படுத்த முயற்சி செய்யும் அதிமுக !
சபாநாயகர் அப்பாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது நாளை விவாதம்
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!