இலங்கைக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் நடைபெற்ற டி20 கிரிக்கெட் தொடரை 3 – 0 (3) என்ற கணக்கில் இந்தியா வென்றது. குறிப்பாக ஜூலை 30ஆம் தேதி நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டியில் சூப்பர் ஓவரில் இலங்கை தோற்கடித்து இந்தியா அசத்தியது. பல்லக்கேல் நகரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா கில் 39, வாஷிங்டன் சுந்தர் 25, ரியான் பராக் 26 ரன்கள் எடுத்த உதவியுடன் இந்தியா 137/9 ரன்கள் குவித்தது.
அதைத் துரத்திய இலங்கையும் 20 ஓவரில் 137/9 ரன்கள் எடுத்ததால் போட்டி சமனில் முடிந்தது. அதைத் தொடர்ந்து வெற்றியாளரை தீர்மானிப்பதற்காக நடத்தப்பட்ட சூப்பர் ஓவரில் வாஷிங்டன் சுந்தர் 2 ரன்கள் மட்டும் கொடுத்து 2 விக்கெட்டுகள் எடுத்து இலங்கையை சுருட்டினார். அதன் பின் தீக்சனா வீசிய சூப்பர் ஓவரில் 3 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு கேப்டன் சூரியகுமார் முதல் பந்திலேயே பவுண்டரி அடித்து வெற்றி பெற வைத்தார்.
அதனால் புதிய கேப்டன் சூரியகுமார் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தலைமையில் முதல் தொடரிலேயே ஒயிட்வாஷ் வெற்றியை பெற்று இந்தியா தங்களது பயணத்தை துவங்கியது. முன்னதாக அப்போட்டியில் கடைசி 2 ஓவரில் இலங்கைக்கு வெறும் 9 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. அதனால் இந்தியா தோற்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 19வது ஓவரை பகுதி நேர பவுலரான ரிங்கு சிங்கிடம் கேப்டன் சூரியகுமார் கொடுத்தார்.
அதைப் பயன்படுத்திய ரிங்கு வெறும் 2 ரன்கள் மட்டும் கொடுத்து 2 விக்கெட்டுகள் எடுத்தார். அதனால் கடைசி ஓவரில் 7 ரன்கள் தேவைப்பட்ட போது முதலில் சிராஜை அழைத்த சூரியகுமார் பின்னர் தாமே பந்து வீசி 6 ரன் மட்டும் கொடுத்து போட்டியை சமன் செய்தார். இந்நிலையில் அதற்கான காரணங்கள் பற்றி போட்டியின் முடிவில் சூரியகுமார் பேசியது.
“20வது ஓவருக்கான முடிவு மிகவும் எளிது. ஆனால் 19வது ஓவர் தான் கடினமான பகுதியாகும். அப்போது சிராஜ் மற்றும் சில பவுலர்களுக்கு ஓவர் மீதம் இருந்தது. இருப்பினும் அந்த பிட்ச்க்கு ரிங்கு பொருந்துவார் என்று நான் கருதினேன். ஏனெனில் அவர் வலைப்பயிற்சியில் பந்து வீசுவதை நான் பார்த்துள்ளேன். எனவே நான் சரியாக இருக்கும் என்று நினைத்து எடுத்த அந்த முடிவு சரியாக அமைந்தது”
“இந்திய அணிக்கு 19வது ஓவர் தான் கடினம் என்பது எனக்குத் தெரியும். அதனாலேயே ரிங்விடம் அந்த பொறுப்பை கொடுத்தேன். குறிப்பாக வலது கை வீரருக்கு எதிராக இடது கை வீரருக்கு பந்து வீசுவது பேட்ஸ்மேனுக்கு கடினமாக இருக்கும். ரிங்கு அங்கே தன்னுடைய திறமையை பயன்படுத்தி என்னுடைய வேலையை எளிதாக்கினார். அவரால் எனக்கு இன்னும் ஒரு பவுலிங் ஆப்சன் (20ஓவர் ) கிடைத்தது” என்று கூறினார்.
பிறக்கும்போது வால் உண்டு இறக்கும்போது வால் இல்லை அது என்ன?
வெளியே உள்ளதை எறிந்து உள்ளே உள்ளதை சமைத்தான். பின் வெளியே உள்ளதை சாப்பிட்டு விட்டு உள்ளே உள்ளதை எறிந்தான் அது என்ன?
அதட்டுவான், அலறுவான் ஆனால் கோட்டையை விட்டு வரமாட்டான் அவன் யார்?
மாந்திரீக பூஜை என்றால் என்ன? பன்னீர்செல்வம் கேள்விக்கு பதில் சொன்ன திமுக அமைச்சர்!
எடப்பாடிக்கு எதிரான போர்க்கொடி, செங்கோட்டையனின் கட்சிப் பதவிகள் பறிப்பு?
சபாநாயகர் அப்பாவு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி!
செங்கோட்டையனை சமாதானப்படுத்த முயற்சி செய்யும் அதிமுக !
சபாநாயகர் அப்பாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது நாளை விவாதம்
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!